Wednesday, December 10, 2014

CHO RAMASWAMY

Extract from
Arul Samuel Puliangudi's facebook page.

சோ..!
---------
சோவைக் குறித்து எல்லோரும் சொல்லும் ஒரு குறை அவர் ஒரு பார்ப்பனர் என்பதுவே..
...
அதைத்தாண்டி அவரிடம் என்ன குறை கண்டீர்கள் என்று கேள்வி கேட்டால் அதற்கு விடை எவரிடமும் இருக்காது.
அவர் ஒரு அரசியல் புரோக்கர்..சரிதான்..அதனால் அவர் அடைந்த பலன் என்ன? ஆதாயம் என்ன? பணம் சம்பாதித்துவிட்டாரா?
அதிகாரத்திற்கு வந்தாரா..அல்லது தன் செல்வாக்கைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்துவிட்டாரா..
அவர் அவாளுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்..சரி அதனால் என்ன?
ஒரு நாடார் இன்னொரு நநாடாருக்கும் ஒரு தேவர் இன்னொரு தேவருக்கும் ஒரு முதலியார் இன்னொரு முதலியாருக்கும் சப்போர்ட் செய்வதில்லையா.. நமக்கிருக்கும் அந்த உரிமை அவருக்கு மட்டும் அந்தணராய் பிறந்துவிட்டதாலேயே இருக்கக்கூடாதா?
சரி..அப்படியே வைத்துக்கொள்வோம்..தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ‘அவாளுக்கு’ அவர் செய்த நன்மைகள் என்ன? அவர் தனது சமூகத்திற்கு வாங்கிக்கொடுத்த சலுகைகள்தான் என்ன?
ம்..அவர் ஏன் ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்குகிறார்? ஜாதி உணர்வில்தானே..?
ஓ அப்படியா..அப்படியென்றால் 1991 முதல் 1996 முடிய நடந்த ஜெயலலிதா ஆட்சியை அதிகம் எதிர்த்தவர்கள் யார்? இரண்டு பேர்தான். ஒருவர் சுப்பிரமணியம் சுவாமி..இன்னொருவர் சோ..
ஆனால் அதற்கான பலனை அனுபவித்தது கலைஞர். அதுதானே உண்மை? தமிழ்மாநிலக் காங்கிரஸை உருவாக்கி..ரஜினியை அதற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைத்து..அதிமுக ஆட்சியை விரட்டியது சோ..தானே? ஏன் அன்றைக்கு ஜெயலலிதா ஜாதி மாறியிருந்ததா? அல்லது அன்றைக்கு கலைஞர் பிராமண ஜாதிக்கு மாறியிருந்தாரா?







இன்றைக்கு நாமெல்லாரும் தூக்கிப்பிடிக்கும் காமராஜரை அன்றைக்கு உயரத் தூக்கிப்பிடித்தது..சோ..மட்டும்தான். அன்றைக்கு காங்கிரஸே காமராஜரைத் தூக்கி எறிந்துவிட்டதே.. காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு வருத்தப்பட்டது சோ மட்டும்தானே. திமுக அன்றைக்கு காமராஜரை எள்ளி நகையாடியது. தமிழர்கள் எள்ளி நகையாடினார்கள். ஆனால் இன்றைக்கு வெட்கமேயில்லாமல் காமராஜர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புகழை நாம் பாடிக்கொண்டிருக்கின்றோம்.
விடுதலைப்புலிகளைக் குறித்து எம்.ஜி.ஆர் காலத்திலேயே தீர்க்கதரிசனமாய் சொன்ன ஒரே மனிதர் சோ..மட்டும் தான்.. அவர்களால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு அழிவு ஏற்படும் என்று.
அதன்படியே இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். மீனம்பாக்க விமான நிலையத்திலேயே வைத்து இலங்கைத் தமிழ் தலைவர்களை வேட்டையாடினர். அதன்பிறகுதான் எம்.ஜி.ஆர் விழித்துக்கொண்டார். தேவாரத்திற்கு அதிகாரம் கொடுத்து விடுதலைப்புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டி ஒடுக்கினார்.
பின்னர் கலைஞர் ஆட்சியில் தரைவிரித்து ஆடினர். தமிழர்களுக்கு தனி மாநிலம் கொடுத்து ஒரு உடன்படிக்கையைக் கொண்டு வந்து சிங்கள அரசை ராஜீவ்காந்தி அடிபணிய வைத்தார். ஆனால் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் அதற்கு உடன்பட மறுத்தனர். இந்தியாவிலிருந்து படை அனுப்பிவைக்கப்பட்டது.வரதராஜப் பெருமாள் முதல் இலங்கைத் தமிழக முதல்வரானார்.பதிலுக்கு ராஜீவ்காந்தியை நமது நாட்டிற்கே வந்து கொலை செய்தனர். இந்தியாவின் ஆதரவு தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் விடுதலைப்புலிகளுக்கு பறிபோனது. கடைசியில் விடுதலைப்புலிகளின் தவறான அணுகுமுறைகளினாலேயே ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினமும் அழிந்தது.
இதை 1980களிலேயே சொன்னவர் சோ ஒருவர்தான்.
திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். அதில் தவறென்ன?
அவரது விமர்சனங்களுக்கு பதில் என்ன? அவர் பார்ப்பனர் என்பதா?
விடுதலைப்புலிகளை..தீவிரவாதத்தை..தமிழ்த் தீவிரவாதத்தை அவர் எதிர்க்கிறார். அதிலும் அவர் தவறென்ன?
தேசீய அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்..
இந்திராகாந்திக்கு மாற்றாக ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வர உதவினார். காரணம்..இந்திராகாந்தி காமராஜரை உதாசீதனப்படுத்தினார்..அதிகார மமதை கொண்டார்..அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்ட பிறகு தான் இந்திராகாந்தி நிதானத்திற்கு வந்தார்.
1996ல் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து எறியப்பட்ட பிறகுதான் அவரும் பெருமளவிற்கு நிதானத்திற்கு வந்திருக்கிறார்.
அந்தணர் என்போர் யார் என்று சோ..விடத்திலே துக்ளக் பத்திரிக்கையில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.
அவர் பதில்..” மனு தர்மத்தின்படி மனிதர்களுள் 4 ஜாதிகள் உண்டு. அவர்கள்,1.சத்ரியர்கள்..(அரசர்கள்), 2.அந்தணர்கள்(அரசர்களுக்கு ஆலோசனை சொல்லுபவர்கள்),3.சூத்திரர்கள்(அரசர்களின் உத்தரவை செயல்படுத்துபவர்கள்) மற்றும் 4.வைசியர்கள்(அந்த 3 பேருக்கும் தேவையான பொருட்களைக் கண்டறிந்து கொண்டுவந்து விற்பனை செய்யும் வியாபாரிகள்). ஆனால் இன்றைக்கு யாரும் சத்ரியர்கள் அல்ல..அந்தணர்கள் அல்ல..சூத்திரர்களும் அல்ல..எல்லோரும் ஒரே ஜாதி..அது வியாபாரிகள் என்ற வைசியர்களே” இப்படி ஒரு பதிலைத் துணிகரமாய் சொல்வதற்கு ஒரு பார்ப்பானுக்கு துணிவு இருக்கிறதே..வேறு யாருக்கு அப்படி ஒரு நேர்மை இருக்கிறது?
சரி..நான் சொல்ல வந்தது அதுவல்ல செய்தி..
படத்தைப் பாருங்கள்..எவ்வளவு அரசியல்வீதியாக எதிர்த்தாலும் கலைஞரால் அவரைப் புறக்கணிக்கவோ பகைக்கவோ முடியவில்லை. அதுதான் சோ..வின் பலம்.
ஒரே நேரத்தில் கலைஞரையும் தன் வீட்டிற்கு அழைக்க முடிகிறது..ஜெயலலிதாவையும் அழைக்க முடிகிறது. அததான் சோ..வின் நேர்மை.
அவர் கையில் வைத்திருக்கும் பத்திரிகையைப் பாருங்களேன்..அதுதான் சோ..வின் எளிமை.
அதுதான் சூத்திரனாகிய (கலைஞர் பாஷையில்) என்னையும் சோ..வை ரசிக்க வைத்திருக்கிறது 1991ம் ஆண்டிலிருந்தே..
(என்னால்எல்லாம் மற்றவர்களைப் போல் சோ இறந்து 40 அண்டுகளுக்குப் பிறகு புகழ்ந்து பாடிக் கொண்டிருக்க விருப்பம் இல்லை.அவர் உயிரோடு இருக்கும் போதே பாராட்டிவிடுகின்றேன். அதுதான் நான் கற்றதற்கு அடையாளம்..!)

No comments:

Post a Comment