US Hindus To Honour Julia Roberts | ||
|
Saturday, April 21, 2012
Friday, April 20, 2012
Maha Periyava Experiences
Courtesy: T.Nagar - PB Padmanabhan
வசித்து வந்தார். அவர் மனைவி தர்மாம்பாள்;ஒரே மகள் காமாட்சி.
பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில், அவர்களாகப் பார்த்து
அளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன்
பெற்றுக்கொள்வார். ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளிடம்
மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.
இருபத்திரண்டு வயதான காமாட்சிக்குத் திடீரெனத் திருமணம்
நிச்சயமானது. ஒரு மாதத்தில் திருமணம். மணமகன்
ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.
சேர்த்து வெச்சிண்டிருக்கேள்?" கனபாடிகள் பவ்யமாக,
"தாமு, ஒனக்குத் தெரியாதா என்ன? இதுவரைக்கும்
அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்
சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே"
என்று சொல்ல, தர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது.
"அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும்?
நகைநட்டு, சீர்செனத்தி,பொடவை, துணிமணி வாங்கி,சாப்பாடு
போட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும்? இன்னும்
பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும். ஏற்பாடு
பண்ணுங்கோ!" இது தர்மாம்பாள்.
இடிந்து போய் நின்றார் ராமநாத கனபாடிகள்.
உடனே தர்மாம்பாள், "ஒரு வழி இருக்கு, சொல்றேன், கேளுங்கோ,
கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ, கொஞ்சம்
பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ, அங்கே
விஷயத்தைச் சொல்லுங்கோ. பதினைந்தாயிரம் பண ஒத்தாசை
கேளுங்கோ...ஒங்களுக்கு 'இல்லே'னு சொல்லமாட்டா பெரியவா"
என்றாள் நம்பிக்கையுடன்.
பெரியவாளைப் பார்த்துப் பணம் கேக்கறதாவது...என்ன வார்த்த
பேசறே நீ" என்று கனபாடி முடிப்பதற்குள்.....
"என்ன பேசறே தாமு? அவர் ஜகத்குரு. குருவிடம் நாம "ஞான"த்தைத்தான்
யாசிக்கலாமே தவிர, "தான"த்தை [பணத்தை] யாசிக்கப்படாது"
என்று சொல்லிப் பார்த்தார் கனபாடிகள். பயனில்லை. அடுத்த நாள்
"மடிசஞ்சி"யில் [ஆசாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளி்ப் பை]
ஸ்ரீமடத்தில் அன்று மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண ஏகக் கூட்டம்.
ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்று
கொண்டிருந்தார் ராமாநாத கனபாடிகள். நின்றிருந்த அனைவரின்
கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.
பெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும்
அவர் கையிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாக
வாங்கி, பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவி்ட்டார்..
இதைச் சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், "ஐயா...ஐயா...அந்த
தட்டிலே க்ல்யாணப் பத்திரிகை வெச்சிருக்கேன். பெரியவாளிடம்
சமர்ப்பிச்சு ஆசி வாங்கணும். அதை இப்படி எடுங்கோ" என்று
சொல்லிப் பார்த்தார். யார் காதிலும் விழவில்லை.
அதற்குள் மகா ஸ்வாமிகள்,கனபாடிகளைப் பார்த்துவிட்டார்.
ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், "அடடே! நம்ம கரூர் ராமநாத
கனபாடிகளா? வரணும்..வரணும். ஸ்ரீரங்கத்தில் எல்லோரும்
க்ஷேமமா? உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?"
என்று விசாரித்துக் கொண்டே போனார்.
"எல்லாம் பெரியவா அனுக்கிரகத்துலே நன்னா நடக்கிறது"
என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம்
பண்ணி எழுந்தார். உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே,
"ஆத்திலே...பேரு என்ன...ம்..தர்மாம்பாள்தானே? சௌக்யமா?
ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள். அவரோட
அப்பா சுப்ரமண்ய கனபாடிகள். என்ன நான் சொல்ற பேரெல்லாம்
சரிதானே?" என்று கேட்டு முடிப்பதற்குள், ராமநாத கனபாடிகள்
"சரிதான் பெரியவா, என் ஆம்படையா [மனைவி] தாமுதான்
பெரியவாளைப் பார்த்துட்டு வரச் சொன்னா.."என்று குழறினார்.
"அப்போ, நீயா வரல்லே?"; இது பெரியவா.
"அப்படி இல்லே பெர்யவா. பொண்ணுக்குக் கல்யாணம்
வெச்சுருக்கு, தாமுதான் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு
பத்திரிகையை சமர்ப்பிச்சு.." என்று கனபாடிகள் முடிப்பதற்குள்
"ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச் சொல்லியிருப்பா" என்று பூர்த்தி
பண்ணிவிட்டார் ஸ்வாமிகள்.
பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று
புரியாமல் குழம்பினார் கனபாடிகள். இந்நிலையில் பெரியவா,
"உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன். நடத்திக்
கொடுப்பியா?" என்று கேட்டார்.
"அஸைன்மெண்டுன்னா பெரியவா?" இது கனபாடிகள்.
"செய்து முடிக்கவேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம்.
எனக்காகப் பண்ணுவியா?"
பெரியவா திடீரென்று இப்படிக் கேட்டவுடன், வந்த விஷயத்தை
விட்டுவிட்டார் கனபாடிகள். குதூகலத்தோடு,
"சொல்லுங்கோ பெரியவா, காத்துண்டிருக்கேன்"என்றார்.
உடனே பெரியவா, "ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட்
கொடுக்கப் போறேன்? உபன்யாசம் பண்றதுதான். திருநெல்வேலி
கடையநல்லூர் பக்கத்துல ஒரு அக்ரஹாரம் ரொம்ப மோசமான
நிலையில் இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாம
செத்துப் போய்டறதாம். கேரள நம்பூதிரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுல
பெருமாள் கோயில்ல "பாகவத உபன்யாசம்" பண்ணச் சொன்னாளாம்.
"பாகவத உபன்யாசம்" பண்ண ஒருத்தரை அனுப்பி உதவி
பண்ணணும்"னு பொறுப்பை என் தலைல கட்டிட்டுப் போயிட்டார்.
நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணி்ட்டு வரணும்.
விவரமெல்லாம் மடத்து மானேஜருக்குத் தெரியும் கேட்டுக்கோ
சிலவுக்கு மடத்துல பணம் வாங்கி்க்கோ. இன்னிக்கு ராத்திரியே
விழுப்புரத்தில் ரயில் ஏறிடு. சம்பாவனை [வெகுமானம்] அவா
பார்த்துப் பண்ணுவா. போ..போ...போய் சாப்டுட்டு ரெஸ்ட்
எடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு பக்தரிடம்
பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்வாமிகள்.
அன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள்
மதியம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார். பெருமாள் கோயில்
பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அைழைத்துச் சென்றார்.
ஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள்
கோயில். கோயில். பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார்.
கனபாடிகள். ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர் ஈ காக்காகூட
கனபாடிகளை வந்து பார்க்கவிலை. "உபன்யாசத்தின்போது எலோரும்
வருவா" என அவரே தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார்.
நினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரே
எதிரே ஸ்ரீவரதராஜப் பெருமாள், கோயில் பட்டர்,
கோயில் மெய்க்காவல்காரர். இவ்வளவு பேர்தான்.
உபன்யாசம் முடிந்ததும், "ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமே
வரல்லே?" என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார்
கனபாடிகள்.
அதற்கு பட்டர்,"ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டுபட்டுக்
கிடக்கு! இந்தக் கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவது
என்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை, அதை
முடிவு கட்டிண்டுதான் "கோயிலுக்குள்ளே நுழைவோம்"னு
சொல்லிட்டா. உப்ன்யாசத்துக்கு நீங்க வந்திருக்கிற சமயத்துல
ஊர் இ்ப்படி ஆயிருக்கேனு ரொம்ப வருத்தப்படறேன்" என்று
ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார்,
ராமநாத கனபாடிகள். பட்டாச்சார்யார் பெருமாளுக்கு அர்ச்சனை
பண்ணி பிரசாதத் தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயை
வைத்தார். மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம்
சில்லரையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார். பட்டர்
ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச் சொல்லி சம்பாவனைத் தட்டைக்
சொன்னேள். எத்தனை ரூவா வேணும்னாலும் சம்பாவனை
பண்ணலாம். பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயிலேத்தி
விட்டுடறேன்" என கண்களில் நீர் மல்க உருகினார்!.
வந்து சேர்ந்தார் கனபாடிகள்.
"வா ராமநாதா! உபன்யாசம் முடிச்சுட்டு இப்பதான் வரயா?
பேஷ்...பேஷ்! உபன்யாசத்துக்கு நல்ல கூட்டமோ?
கனபாடிகள் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும் குரலில்
பெரியவாளிடம், "இல்லே பெரியவா, அப்படி எல்லாம்
கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளே
ஏதோ பிரச்னையாம் பெரியவா, அதனாலே கோயில் பக்கம்
ஏழு நாளும் யாருமே வல்லே"என்று ஆதங்கப்பட்டார்
கனபாடிகள்.
வருத்தமா இருக்கு" இது கனபாடிகள்.
உடனே பெரியவா, "இதுக்காகக் கண் கலங்கப்படாது. யார் அந்த
ரெண்டு பாக்யசாலிகள்? சொல்லேன், கேட்போம்" என்றார்.
என்று சொல்லி முடிப்பதற்குள், ஸ்வாமிகள் இடி இடியென்று
வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
"ராமநாதா... நீ பெரிய பாக்யசாலிடா! தேர்ல ஒக்காந்து
கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன்
ஒருத்தன்தான் கேட்டான். ஒனக்கு பாரு.ரெண்டு பேர்வழிகள்
கேட்டிருக்கா. கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி"
என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும்
சிரிப்பு வந்துவிட்டது.
"அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும், மெய்க்காவல்காரர்
ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து முப்பத்திரண்டே கால் ரூவா
கெடச்சுது பெரியவா!" ;கனபாடிகள் தெரிவித்தார்.
"ராமநாதா, நான் சொன்னதுக்காக நீ அங்கே போயி்ட்டு வந்தே.
உன்னோட வேதப் புலமைக்கு நெறயப் பண்ணனும்.இந்தச்
சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு" என்று கூறி, காரியஸ்தரைக்
கூப்பிட்டார் ஸ்வாமிகள். அவரிடம், கனபாடிகளு்க்குச் சால்வை
போர்த்தி ஆயிரம் ரூபாய் பழத்தட்டில் வைத்துத் தரச் சொன்னார்.
ஸ்வாமிகள்.
வந்தோம் என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகத்துக்கு
வந்தது."பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை...பெண் கல்யாணம்
நன்னா நடக்கணும். "அதுக்கு...அதுக்கு..." என்று அவர்
தயங்கவும்,
ஜாக்ரதையா ஊருக்குப் போய்ட்டு வா." என்று விடை
கொடுத்தார் ஆச்சார்யாள்.
இருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார்
ராமநாத கனபாடிகள்.
"இருங்கோ..இருங்கோ...வந்துட்டேன்..."
உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக் குரல்..
வாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர்
கொடுத்தாள். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போனாள்.
காபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு,"இங்கே பூஜை
ரூமுக்கு வந்து பாருங்கோ" என்று கனபாடிகளை அழைத்துப்
போனாள்,
பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள்.அங்கே ஸ்வாமிக்கு
முன் ஒரு பெரிய மூங்கில் தட்டில்,பழ வகைகளுடன் புடவை,
வேஷ்டிஇரண்டு திருமாங்கல்யம்,மஞ்சள்,குங்குமம்,புஷ்பம்
இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது.
"தாமு..இதெல்லாம்..." என்று அவர் முடிப்பதற்குள்,,
"காஞ்சிபுரத்துலேர்ந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதா
இன்னிக்குக் காத்தால மடத்தைச் சேர்ந்தவா கொண்டு வந்து
வெச்சுட்டுப் போறா. "எதுக்கு?"னு கேட்டேன். "ஒங்காத்து பொண்
கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச்
சொன்னா"னு சொன்னா" என்று முடித்தாள் அவர் மனைவி.
கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது. "தாமு,
பெரியவாளோட கருணையே கருணை. நான் வாயத் திறந்து
ஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம்
இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு" என்று நா தழுதழுத்தவர்
"கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ" என்று
கேட்டார். "நான் எண்ணிப் பார்க்கலே" என்றாள் அவர் மனைவி.
கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.
பதினைந்தாயிரம் ரூபாய்!
Wednesday, April 11, 2012
Tamil New Year Prediction - Mesham to Midhunam
நந்தன புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் வருடம் முழுவதும் ராசிக்கு இரண்டில் அமர்ந்து நற்பலன்களை வழங்குகிறார். சனிபகவான் தன் பங்கிற்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சிறப்பான பலன் தரும் வகையில் உள்ளார். எண்ணத்திலும் செயலிலும் விவேகம் கலந்திருக்கும். தம்பி, தங்கைகள் உங்களின் உதவியை நாடி வருவர். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பைப் பின்பற்றுவது நல்லது. தாய்வழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடு உண்டாகும். புத்திரர் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பர். கல்வி, வேலைவாய்ப்பில்முன்னேற்றம்காண்பர். குலதெய்வ அருள் துணை நின்று உதவும். பூர்வ சொத்தில் எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். வருட முற்பகுதியில் எதிரி பயந்து விலகுவதும் வருட பிற்பகுதியில் அவர்களின் செயலை சமயோசிதமாக முறியடிப்பதுமான நிலை இருக்கும். உடல்நலக்குறைவு நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். கடன் தொல்லை சரியாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தில் ஒற்றுமையை நிலைக்கச் செய்வர். செப்டம்பர் முதல் மார்ச் வரை அவ்வப்போது குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு உருவாகும். அதன்மூலம் தாராள லாபமும், புகழும் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலில் புதிய வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். லாபம் பன்மடங்கு அதிகரிப்பதால் சேமிக்க இடமுண்டு. சமூகசேவையில் ஆர்வமுடன் ஈடுபடுவர். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தங்களில் அக்கறை உண்டாகும்.
வியாபாரிகள்: மூலதனத்தை அதிகரித்து விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பர். லாபவிகிதம் முன்பை விட கூடும். சரக்கு இருப்பு வைக்க கூடுதல் இடங்களை ஏற்பாடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவர்.
பணியாளர்கள்: பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பணியிலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் படிப்படியாகக் கிடைக்கும். சம்பள உயர்வு திருப்திகரமாக அமையும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் புதிய நுட்பங்களை பயன்படுத்தி பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு, சலுகை எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் விருப்பமறிந்து செயல்படுவது நல்லது. தாய்வழி சீர்முறைகளைக் கேட்டுப்பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி உற்பத்தியை அதிகரிப்பர்.
மாணவர்கள்: மாணவர்கள் ஒருமுகத்தன்மையோடு படித்தால் மட்டுமே எதிர்பார்த்த தரத்தேர்ச்சி கிடைக்கும். படிப்புக்கான பணவசதி பெறுவதில் சிரமம் இருக்காது. சாகச விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. சக மாணவர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரியால் உண்டாகும் தொல்லைகளை தகுந்த எதிர்நடவடிக்கையால் சரிசெய்வீர்கள். அரசியல் பணிக்கு புத்திரர் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வர். வெளியூர் பயணத்தின் மூலம் நல்ல அனுபவமும் புதியவர்களின் தொடர்பும் கிடைக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மகசூல் சிறந்து தாராள பணவரவைப் பெற்றுத்தரும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னை இருந்தால் வருட முற்பகுதியில் நல்ல தீர்வு கிடைக்கும்.
சாதுர்யமாகச் செயல்பட்டு சாதனை படைக்கும் ரிஷபராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனிபகவான் மட்டுமே புரட்டாசி முதல் பங்குனி வரை (செப்டம்பர்- மார்ச்) நற்பலன்களை அள்ளி வழங்கும் வகையில் செயல்படுகிறார். ஆனால், மற்ற கிரகங்களான குரு, கேது, ராகுவின் அமர்வால் சங்கடமான அனுபவத்தைப் பெறுவீர்கள். எந்த விஷயத்தையும் குழப்பமான மனதுடன் அணுகுவீர்கள். புத்திரர் ஆவணி (ஆகஸ்ட்) மாதம் வரை மந்தகதியிலும் பின் சுறுசுறுப்பான வகையிலும் செயல்படுவர். பூர்வ சொத்தின் மூலம் ஆண்டின் தொடக்கத்தில் குறைவான வருமானமும் புரட்டாசி (செப்டம்பர்) முதல் ராகு கேது பெயர்ச்சியால் அதிக வருமானமும் கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாட்டால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். எதிரிகளின் மறைமுகத் தொல்லைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முயற்சிப்பீர்கள். உடல்நலம் சீராக இருக்க சத்தான உணவுப்பழக்கம், தகுந்த ஓய்வுமுறையைப் பின்பற்றுவது நல்லது. விலைமதிப்பு மிக்க பொருட்களை இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். குடும்பச் செலவு நாளுக்கு நாள் அதிகரிக்கும். சிக்கனம் மிக அவசியம். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி நட்பு மலரும். தொழில் சார்ந்த வகையில் குறுக்கிடும் சிரமங்களைச் சரிசெய்வதில் அக்கறை தேவைப்படும்.
தொழிலதிபர்கள்: தொழிலில் வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் பல்வேறு குறுக்கீடுகளை எதிர்கொள்வர். முறையான மாற்றுத்திட்டங்களை செயல்படுத்துவதால் மட்டுமே வளர்ச்சி சீராகும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். சக தொழில் சார்ந்த எவருக்கும் பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. தொழில் கூட்டமைப்பில் கிடைக்கிற பதவி, பொறுப்பால் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
வியாபாரிகள்: வியாபாரத்தில் மறைமுகப் போட்டியை எதிர்கொள்வர். லாபவிகிதம் சுமாராக இருக்கும். சலுகைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வியாபாரத்தைத் தக்கவைப்பர். கூடுமானவரை ரொக்கத்திற்கு விற்பது நல்லது. விரிவாக்க முயற்சி இப்போதைக்கு கூடாது.
பணியாளர்கள்: பணியாளர்கள் தயக்க மனதுடன் சுதந்திரம் இல்லாமல் பணியாற்றுவர். பணி இலக்கு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நிர்வாகத்தின் கண்டிப்பு, ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரலாம். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் பொறுமை காக்க வேண்டியதிருக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவால் சிரமத்திற்கு ஆளாவர். சிலருக்கு விரும்பாத பணியிடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இடங்களில் குளறுபடியான சூழ்நிலையை எதிர்கொள்வர். பணி நிறைவேற்றுவதில் கவனம் கொள்வதால் மட்டுமே பணி இலக்கு குறித்தகாலத்தில் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைப்பயன் பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பர். ஆடம்பர பணச்செலவு குறைப்பதால் கடன் நெருக்கடி குறையும். வரவுக்கேற்ப செலவைத் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. இரவல் நகை கொடுக்க, வாங்கக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே வளர்ச்சி சீராக இருக்கும். பாக்கி வசூலிக்க கடின முயற்சி தேவைப்படும்.
மாணவர்கள்: படிப்பில் இருந்து வரும் கவனக்குறைவை மாணவர்கள் சரிசெய்து கொள்வது நல்லது. படிப்புக்கான செலவை மட்டும் பெற்றோரிடம் எதிர்பார்க்க வேண்டும். ஆடம்பரச்செலவு கூடாது. இரவல் வாங்கிய பொருள் காணாமல் போக வாய்ப்பு உள்ளது. அலைச்சல், வெளியூர் பயணம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
அரசியல்வாதிகள்: சமூகப்பணி செய்வதில் ஆர்வம் குறையும். ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள பணம் தேவைப்படும். அரசு அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை நிறைவேற்ற கடின முயற்சி தேவைப்படும். பொறுமையைக் கடைபிடித்தால் மட்டுமே கடந்த கால நற்பெயரை தக்கவைக்க முடியும். எதிரியால் வருகிற தொல்லை வருட பிற்பகுதியில் சரியாகும்.
விவசாயிகள்: விடாமுயற்சியுடன் உழைத்து மகசூலைப் பெருக்க முயற்சிப்பர். செலவு அதிகரித்தாலும் விலைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்காமல் போகலாம் கவனம். கால்நடைவளர்ப்பினால் கிடைக்கிற வருமானம் குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்யும். நிலம் தொடர்பான பிரச்னை இருந்தால் வருட பிற்பகுதியில் சரியாகும்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் குடும்பத்தேவைக்கானவருமானம் கிடைக்கும்.
மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - வீட்டில் விசேஷங்க 65/100
வாழ்வில் திட்டமிட்டுச் செயலாற்றும் மிதுனராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் ராகு, கார்த்திகை மாதம் வரையிலும் கேது கார்த்திகை முதல் பங்குனி வரையிலும்(டிசம்பர்-மார்ச்) அளப்பரிய நற்பலன்களை சிறப்பாக வழங்குவர். குரு, சனிபகவானின் அமர்வு உங்கள் வாழ்வில் சில சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். மனஉறுதி, புத்தி சாதுர்யத்துடன் செயல்படுவதால் சிரமங்களை பெருமளவில் சரிசெய்யலாம். இடம், பொருள் அறிந்து பேசுவதால் நற்பெயரும் புகழும் தொடர்ந்திடும். சமூகப்பணியில் இருந்த ஆர்வம் குறையும். வீட்டில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவதால் விபத்து அணுகாத நல்வாழ்வு பெறுவீர்கள். புத்திரர் பிடிவாத குணங்களுடன் செயல்படுகிற கிரக சூழ்நிலை உள்ளது. எதிரியினால் வரும் தொல்லையிலிருந்து விடுதலை காண்பீர்கள். நிலுவைக் கடன் ஓரளவு அடைபடும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டபடி வீட்டில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தாராள பணச்செலவில் வாங்குவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து குடும்பஒற்றுமையை நிலைநாட்டுவர்.குடும்பத்தில் குதூகலமும், நிம்மதியும் நிலைத்திருக்கும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். சேமிப்பு உயரும். மூத்த சகோதரர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுத்துவீர்கள்.
தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் விறுவிறுப்பாகச் செயல்பட்டு நல்ல வளர்ச்சி காண்பர். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு லாபத்தை உயர்த்துவர். விரிவாக்க முயற்சி, உபதொழில் தொடங்குதல் போன்றவற்றில் வெற்றி காண்பர்.
வியாபாரிகள்: வியாபாரிகள் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிப்பர். முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் லாபம் உயரும். வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வர நேரிடும். பழைய கடன் ஓரளவு அடைபடும். சகவியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
பணியாளர்கள்: பணியாளர்கள் உத்வேகமுடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. வீடு கட்டவும், வாகனம் வாங்கவும் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளிடம் நற்பெயர் காண்பர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி இலக்கை நிறைவேற்றுவர். கடந்த காலத்தில் இருந்த அவப்பெயர் விலகி நன்மதிப்பு உண்டாகும். புதிய பதவி, பொறுப்பு அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணம் தாராளமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் ஆலோசனையால் புதிய சந்தை வாய்ப்பு கிடைக்கப்பெறுவர்.
மாணவர்கள்: மாணவர்கள் படிப்பில் ஞாபகத்திறன் வளர்ச்சி பெற்று கல்வியில் வளர்ச்சி காண்பர். கல்விச் செலவுக்கான பணம் சீராக கிடைக்கும். வீண்செலவைக் குறைத்துக் கொள்வது அவசியம். நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுமுயற்சியில் ஈடுபடுவர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.
அரசியல்வாதிகள்: சித்திரை முதல் கார்த்திகை மாதம் வரை (ஏப்ரல்-டிசம்பர்) உங்களின் அரசியல்பணியால் சமூகத்தில் நல்ல வரவேற்பைக் காண்பீர்கள். ஆதரவாளர்களின் ஆதரவைக் கண்டு புதிய உத்வேகம் உண்டாகும். எதிரிகள் பலமிழந்து விலகிச் செல்வர். எதிர்பார்த்த பதவி, புதிய பொறுப்பு அதிர்ஷ்டகரமான வகையில் கிடைக்கும். புத்திரர்கள் அரசியல் பணிக்கு ஓரளவு துணை நிற்பர்.
விவசாயிகள்: விவசாயப் பணிகள் சீராக நிறைவேறும். விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்று லாபம் காண்பர். கால்நடைமூலம் கிடைக்கும் ஆதாயம் குடும்பச் செலவிற்கு உதவும். நவீன உழவுக்கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். நிலம் தொடர்பான பிரச்னைகளில் சமரச போக்கை கையாளுவது நல்லது.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் தொழில் முன்னேற்றமும், நல்ல லாபமும் உண்டாகும்.