கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள்,
மோசடி செய்தவர்கள் – 1000 முறை
கூறுவோம் – என்ன செய்து விடுவார்கள் ?

கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள்,
கற்பழித்தவர்கள், மோசடி வழக்குகளில் சிக்கியவர்கள்
எல்லாரும் பாராளுமன்றத்திற்குள்
வந்து விட்டார்கள் -
இப்படிச் சொன்னார் அன்னா ஹஜாரே குழுவைச்
சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால்.
4 நாட்களுக்கு முன்னதாக,உத்திரப் பிரதேச தேர்தல்
கூட்டத்தில், கிரேடர் நோய்டா
என்கிற இடத்தில் பேசும்போது அன்னா ஹஜாரே
குழுவைச் சேர்ந்த, அர்விந்த் கெஜ்ரிவால்
இப்படிச் சொன்னதை மிகவும் சீரியசாக
எடுத்துக்கொண்ட -
லாலு பிரசாத் கட்சி, முலாயம் சிங் கட்சி,
காங்கிரஸ் கட்சி ஆகியவை கெஜ்ரிவால் மீது
கடும் தாக்குதல் நடத்தி உள்ளன.
கெஜ்ரிவாலை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்
சேர்க்க வேண்டும் என்று ஒரு கட்சியும்,
ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர்
என்று இன்னொரு கட்சியினரும்,
கெஜ்ரிவால் மீது பாராளுமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு
கொண்டு வரப்படும் என்று காங்கிரசின்
மணீஷ் திவாரியும் கூறி உள்ளனர்.
ஏதோ கொடும் குற்றம் இழைத்து விட்டது போல்
ஆளாளுக்கு பயமுறுத்துகின்றனர்.
இதற்கு பதில் அளித்துள்ள கெஜ்ரிவால் -
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில்
மூன்றில் ஒரு பங்கினர் மீது கிரிமினல்
குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில்
நான் கூறியதில் என்ன தவறு என்று கேட்கிறார்.
அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு முறை சொன்னதை
நாம் 1000 முறை சொல்வோம்.
என்ன செய்வார்கள் பார்ப்போமே !
நாம் குறை சொல்வது பாராளுமன்றத்தை அல்ல.
அதில் குற்றவாளிகள் போய் புகுந்து கொண்டுள்ள
இந்த முறையை -ஸிஸ்டத்தை – தான்.
இப்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் -
14 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு,
20 பேர் மீது கொலை செய்ய முயன்றதாக
குற்றச்சாட்டு,
11 பேர் மீது மோசடி வழக்கு,
13 பேர் மீது ஆள்கடத்தல் வழக்கு -
நிலுவையில் இருக்கின்ற நிலையில் இப்படிச்
சொல்வதில் என்ன தவறு ?
இதைத்தவிர லஞ்ச ஊழல் கிரிமினல் வழக்குகளில் -
சுரேஷ் கல்மாடி,ராஜா, கனிமொழி,
லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ்,
அமர்சிங் ஆகிய தற்போதைய எம்.பி.க்கள்
சிக்கி உள்ளனர் -வழக்குகள் நடக்கின்றன.
மாட்டியவர்கள் இவர்கள் – இன்னும் மாட்டாதவர்கள் -
“அன்னை”யின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும்
மாறன்களும், சூரன்களும் எத்தனை பேர் ?
சிபிஐ மட்டும் - தனிப்பட்ட,
சுதந்திரமான விசாரணை அமைப்பாக
இருந்திருந்தால் – இன்னும் எத்தனையோ
மந்திரிகள் மாஜிகளாகி, லஞ்ச ஊழல் வழக்கில்
கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
இன்றைய தினம் -ஒரு கொலை, கொள்ளை,
மோசடி, லஞ்ச ஊழல் வழக்கில் தீர்ப்பு வர
20-25 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலை ஏன் ?
இது மாற வேண்டாமா ? எந்த வழக்காக இருந்தாலும்
குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டாமா?
ஆனால் – கல்மாடி, ராஜா, லாலு பிரசாத் யாதவ்,
முலாயம் சிங் போன்றோர் இருக்கும் வரை
கடுமையான சட்டங்கள் பாராளுமன்றத்தில்
எப்படி நிறைவேறும் ?
லோக்பால் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட
போது நிகழ்ந்த கூத்துக்களை எல்லாம்
நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டு தானே இருந்தோம் !
பலமான லோக்பால் சட்டமோ,
விரைவில் வழக்குகளை விசாரித்து,
தீர்ப்புகள் வழங்கக்கூடிய வகையில்
நீதிமன்ற சீர்திருத்த முறைகளோ -
பாராளுமன்றத்தில் எப்படி நிறைவேற முடியும் ?
அத்தகைய சட்டங்கள் வந்தால் – முதலில் உள்ளே
போவது இவர்களாகவே இருக்கும் என்கிற நிலையில் ?
அத்தகைய சட்டங்கள் நிறைவேற
இவர்கள் எப்படி விடுவார்கள் ?
கெஜ்ரிவால் சொன்னதைத் தான் நாமும் -
பெரும்பாலான மக்களும் நினைக்கிறோம்.
பாராளுமன்றத்தில் நல்லவர்களே இல்லை என்று
சொல்லவில்லை. எம்.பி.க்கள் அனைவரும்
அயோக்கியர்கள் என்று யாரும் சொல்லவில்லை.
நல்லவர்கள் குறைவாக இருக்கிறார்கள்.
மோசடி கும்பலின் கையில் பாராளுமன்றம்
சிக்கி இருக்கும் வரையில் – அவர்களால் எந்த
நல்ல சட்டங்களையும் கொண்டு வர முடியாது.
அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு முறை சொன்னதை
நாம் 1000 முறை சொல்வோம். முதலில்
பாராளுமன்றம் சுத்தம் செய்யப்பட வேண்டும் !
கிரிமினல்கள் உள்ளே போவது தடுக்கப்பட
வேண்டும்.
While most of the family including Arbaaz, Sohail and Malaika have been invited to the aarti, which will be held at their farmhouse in Karjat, Salman and dad Salim Khan will be doing the main rituals, says the tabloid.