Friday, November 9, 2012

US MP taking oath by Bagavath geeta

அமெரிக்க பார்லி.யில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் பதவிப் பிரமாண செய்யும் முதல் எம்.பி

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வென்றுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பகவத் கீதையின் பெயரில் சத்தியபிரமாணம் செய்ய இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் ஒரு எம்..பி பதவியேற்பு செய்வது இதுவே முதல் முறை.

குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருக்கும் முன்னர் இவர் 21-வது வயதில் ஹவாய் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 23-வது வயதில் ஹவாய் தேசிய பாதுகாப்புப் படையில் இணைந்தார். பின்னர் 2008-ல் ஆண்டு குவைத்துக்கு அனுப்பப்பட்டார்.
 

 
தற்போது 31வது வயதில் எம்.பி.யாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்திருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் பெயரில் சத்தியபிரமாணம் எடுக்க இருக்கிறார். இவருக்கு அமெரிக்கா வாழ் இந்துக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment