சமஸ்கிருத பாரதி நிறுவனம் தயாரித்துள்ள ஏழு பாடல்களை கொண்ட இசை ஆல்பத்தை மலையாள
நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். சமஸ்கிருத பாரதி நிறுவனம் சார்பில் இசை
ஆல்பம் தயாரிக்கப்பட்டுவருகிறது.
ஏழு பாடல்களை அடங்கிய இசை ஆல்பத்தில் அவை பாடல்களாக மட்டும் இல்லாமல் இசையின் பல்வேறு பரிணாமங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இசை விற்பன்னர்களுக்காக மட்டுமல்லாது சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தயாரிக்கப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பழமை, இனிமை மற்றும் புகழினை உணர்த்தும் வகையில் ஆல்பத்தின் உட்கருத்தாக இருக்கும். தாயின் நேசம்,தேச பக்தி, இயற்கையின் அழகு ஆகியவற்றை மையக்கருத்தாக கொண்ட ஏழு பாடல்களை கொண்ட ஆல்பம் தயாரிக்கப்படுகிறது.
இதனை பிரபல பாடகர்கள் சங்கர் மகாதேவன், சுஜாதா, ஹரிணி, மதுபாலகிருஷ்ணன், கல்பனா ராகவேந்திரா, ரமேஷ் விநாயகம், அருணா சாய்ராம், விசாலாட்சி, கார்த்திகா உள்ளிட்டோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடல்கள் குறித்தும் நடிகர் மோகன்லால் தொகுப்புரை வழங்குகிறார். இந்த ஆல்பத்திற்கு பி.ஆர்.சங்கரநாராயணன், சதீஷ் ரகுநாதன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
மலையாள நடிகர் மோகன்லால் ஏற்கனவே காவாலம் நாராயண பணிக்கரின் "கர்ண பாரம்' என்ற சமஸ்கிருத நாடகத்திற்கு தொகுப்புரை வழங்கியுள்ளார். தற்போது சமஸ்கிருத இசை ஆல்பத்திற்கு தொகுப்புரை வழங்குகிறார்.தற்போது தயாரிப்புகள் நடந்துவரும் இசை ஆல்பம் விரைவில் திருவனந்தபுரத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.
source: dinamalar