Friday, January 20, 2012

HOW TO PERFORM EKADASI FASTING?

 
  1. Actually fasting on the Ekadasi day means fasting from all categories of eatables and drinks.
  2. The eight following exceptions do not break one's fast: drinking water, eating potatoes, sweet potatoes, drinking milk, eating yogurt, eating butter, eating things by the request of a traditionally authentic Brahmana following the orders of a Vedicly authorized Guru, and consuming the prescribed medicines."
  3. According to the Padma Purana, sin personified (Papa-purusha) was told by the Lord to live in food grains on the Ekadasi day. Sin personified retracts himself from all other places and enters into grains on the Ekadasi day. When a person eats grains on the Ekadasi day, he solemnly consumes sins.
  4. In all circumstance eating normal food on Ekadasi is forbidden for all human beings. The Brhan Naradiya Purana states, "It does not matter what category of special birth one has, either born as a Brahmana, Ksyatriya, Vaisya, Sudra, Mleccha or Yavana, male or female, everyone must perform the Ekadasi fast.
  5. "Why is eating normal food forbidden on Ekadasi?" The answer is found in the Naradiya Purana where it states, "All categories of sins live in food grains on the Ekadasi day, anyone who eats them becomes filled with sins."
  6. What about eating Mahaprasad (eatables offered to the Deity of the Lord) on the Ekadasi day? The answer to this question is found in the Narada Pancharatra where it states, "If Mahaprasad includes grains, it should be kept for the next day."
  7. Aany person, even if pious, who eats regular food on Ekadasi day becomes filled with sins." The Visnu Dharmottara states, "In each morsel of regular food eaten by anyone on Ekadasi day, the person receives the equal amount of sin of eating cow's meat.
  8. There is no atonement for those who eat regular food on Ekadasi." The Gautamiya Tantra states, "Those who eat regular food on Ekadasi will fall to hell."
  9. The Visnu Dharmottra states that "anyone who suggests that normal food can be eaten on Ekadasi, or that nothing happens to a person by eating regular food on Ekadasi, become ghosts after their death."
  10. The Narada Purana, the Padma Purana and the Agni Puranas state, "Everyone, including Gurus, Acharya, Sanyasis, Grahasthis, widows and the contaminated woman with her menstrual period, must not eat food grains on the Ekadasi day. Undoubtedly everyone must fast from food grains on the Ekadasi day."
  11. One may ask what is the minimum age and the maximum age for fasting on Ekadasi? The answer to this can be found in the Katyayana Smruti where it states, "Beginning from the age of eight till one completes the age of eighty, he or she must fast on Ekadasi." The Naradiya Purana states, "The authority of observing Ekadasi is given to those who have entered their age of eight and continue till they reached the age of eighty. Everyone must perform Ekadasi."
  12. One may question if the Ekadasi fast is only for Vaisnavas, or intended for others as well? In answer, the Vishnu Dharmottara states, "Those who claim to be devotees of Lord Vishnu, as well as those who worship Lord Siva, everyone must follow the Ekadasi fast."
  13. The Skanda Purana states, "Either one is a devotee of Lord Krsna, Lord Vishnu, Lord Siva, Skanda, Ganesha, Durga or Surya, everyone must fast on the Ekadasi day."
  14. One may ask, what if due to illness one is unable to observe the Ekadasi fast? To this the Vayu Purana states, "If, due to illness, one is genuinely unable to perform the Ekadasi fast, he or she should give charity to a traditional Brahmana with the request that he perform the Ekadasi fast on his/her behalf."
  15. One may inquire, what if one needs medication on Ekadasi? To this the Tattvasagara states, "Medicine consumption does not break ones fast."
  16. Now one may ask, what should one do on Ekadasi after one passes the age of eighty? To this the Bodhayana Smruti states, "After the age of eighty, if one is unable to fast on Ekadasi, eating one meal in the afternoon of Ekadasi day is allowed."
  17. It is stated in the Padma Purana, "If `Sraddha day' of one's parents falls on the Ekadasi day, it should be postponed to the next day (Dvadasi), because even the celestial beings (demigods) do not eat food grains on the Ekadasi day."
  18. It is stated in the Brahma Vaivarta Purana, "If someone performs `Sraddha' on the Ekadasi Day, the giver of the charity, the taker of the charity, and the deceased person for whom the charity is being given, all three go to hell."
  19. It is stated in the Varaha Purana, "If someone becomes contaminated due to a death in the house, still one should perform the Ekadasi fast, after first taking a clean bath and paying homage to Lord Hari."
  20. It stated in the Visnu Rahasya, "Even if one's home is contaminated by a new birth of a child, or a recent death of a relative, still the Ekadasi fast should be observed."
  21. One may wonder what the result of observing Ekadasi is? To this Vasistha Muni states in the Naradiya Purana, "If Ekadasi is observed correctly while worshipping the Supreme Lord Sri Hari, the acquired sins of the follower's previous life get destroyed."
  22. The Brahma Vaivarta Purana states, "In this world there are only two concrete procedures for attaining liberation and atoning for one's sins. These two things are– fasting on the Ekadasi days and chanting of the names of Supreme Lord Sri Hari."
  23. "What to speak of eating normal food containing grains, if someone eats fruits or vegetables on Padma, Parivartini or Haribodhini Ekadasis, I do not forgive, and send him/her down to hell."
  24. Lord Siva tells Parvati the following in the Padma Purana, "If someone ignores the Ekadasi fast and instead observes other fasting days, he/she is liked to a person who reaches for mud, bypassing diamonds."
  25.  
  26. It is stated in the Skanda Purana, "If one puts the merits obtained from performing the Ekadasi fast on one side of a scale, and the merits obtained from performing other fasts on the other side of the scale, the merit obtained from performing the Ekadasi fast will definitely be heavier."
  27. What is the proper way to determine the correct day to follow the Ekadasi fast? In answer to this question, the Siva Purana states, "There are two categories of overlapping days which help to determine the proper fasting day–Ekadasi mixed with previous days (the Dasami tithi), and–Ekadasi mixed with the next day (the Dvadasi tithi). The later day (Ekadasi mixed with Dvadasi) must be accepted for fasting."
  28. Srila Sanatana Goswami states in the Digdarsini Tika (20.203), "Ekadasi mixed with the previous day destroys the merits earned by the observer."
  29. The Supreme Lord is quoted in the Hari Bhakti Vilasa, "What to speak of eating normal food consisting of grains, if someone eats even fruits or vegetables on Padma, Parivartini or Haribodhini Ekadasis, I do not forgive, and send him (her) deep down to hell."
  30. The Visnu Dharmottar states, "One should fast on Ekadasi mixed with Dvadasi, but never fast on Ekadasi mixed with Dasami." Following this rule we astrologically calculate the Ekadasi fasting days. Sometimes it is seen that many Vaisnava calendars differ with our dates because others do not measure their calculation with established Vedic scriptures. Because of the consequence of incurring sin rather than merit from performing Ekadasi on an incorrect day, we say that calculating the correct date is more important than the fasting itself.
  31. It is stated in the Naradiya Purana, "Due to illusion (or being proud), if someone fasts on an incorrect date, rather than gaining merits, one looses merits, looses health, and family members."
  32. The Brahma Purana states, Once Dhrtarastra asked Maitreya Muni why all his sons were dead, to which Maitreya Muni replied, "You, together with your wife, had observed an Ekadasi fast on an incorrect day, that is why not even one of your sons remained alive."
  33. The Brahma Purana states, "When Lord Rama vanished Goddess Sita, She lived in the Ashram of Valmiki Muni. While living there, She asked Valmiki, 'O sage! I am completely pure and devoted to Lord Rama, Why am I suffering?' To this Valmiki meditated deeply on the topic and said, 'You had previously observed an Ekadasi fast on an incorrect day, that is why Your suffering has occurred.'"
  34. In Satyayuga Queen Saivya, the wife of King Hariscandra, asked Vasistha Muni the cause of her suffering. To this Vasistha Muni replied, "Your suffering from separation from your son and husband is due to your observing an Ekadasi fast on an incorrect date." He further said, "Anyone who fasts on Ekadasi mixed with Dasami will surely loose his family members and also suffer in hell."
  35. The Brahma Vaivarta Purana states, "Just as a pot of Ganges water is rejected if a drop of wine falls in it, similarly an Ekadasi date should be rejected if it is tinged with Dasami." It is stated in the Skanda Purana, "Anyone who indicates or suggests to follow the Ekadasi on an incorrect date is certainly bewildered by the illusion created by Sukracharya." This is confirmed by Lord Siva, speaking to Parvati in the Skanda Purana thus, "O Devi, Whoever fasts on an incorrect date for Ekadasi (Ekadasi mixed with Dasami), he or she is asking to go to hell."
  36. One may ask what rules to follow on Ekadasi day? In answer to this, the Hari Bhakti Vilasa states,"Beginning from the day before Ekadasi till one day after Ekadasi, one should avoid every category of sex, avoid bleeding inside the mouth, sleeping in the day time, and activities which are forbidden by the scriptures." To this one may ask, what activities must be done on Ekadasi day? To this the Hari Bhakti Vilasa states, "Worshipping the Lord, chanting His names, studying those scriptures which glorify Lord Hari, and speaking the truth, are the main activities to be done on Ekadasi."
  37. One should avoid bleeding in the mouth the day before, the day of, and the day after a fasting day. Because brushing one's teeth with a toothbrush may cause bleeding in the mouth, it is advised to clean one's teeth by applying toothpaste with one's finger on these days.
  38. According to the scriptures, "On fast days one should avoid sea salt because Agastya muni once drank the ocean and passed it out as urine."

Sunday, January 15, 2012

Manamohana Thusta Kavacham

Courtesy: Thuglak

ஊழல்வாதிகளுக்கு உதவுகிற நல்லெண்ணத்தில், பிரதமரின் லீலா ‎வினோதங்களைப் போற்றி, அவருடைய புகழைப் பாடி, அவருடைய ‎கருணையை வேண்டுகிற ‘மனமோகன துஷ்ட கவசம்’, துக்ளக் ‎தாண்டவராய ஸ்வாமிகளால் இயற்றப்பட்டிருக்கிறது. ‘கந்தர் சஷ்டி ‎கவசம்’ கடவுளை நம்புகிறவர்களுக்கு; ‘மனமோகன துஷ்ட கவசம்’ ‎காசையே கடவுளாக நம்புகிறவர்களுக்கு.

நிருபர்களைச் சந்திக்கும்போதும், கோர்ட்டுக்குப் போகும்போதும், ‎புகார்களுக்குப் பதில் சொல்லும்போதும், ஜெயிலுக்குப் போகும்போதும், ‎ஜாமீனில் வரும்போதும், எதிர்க்கட்சியினரைப் பார்க்கும்போதும், இந்த ‎‎‘மனமோகன துஷ்ட கவசத்தை’ப் பக்தி சிரத்தையுடன் கூறும் ‎ஊழல்வாதிகள், ஸகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.

‎– சோ ‎

காப்பு

ஊழல் செய்வோர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்;
பர்ஸில் பதிப்போர்க்கு செல்வம் நிலைத்து
கதித்து ஓங்கும் – பதவியும் கைகூடும்; டெல்லி
அருள் மனமோகன கவசந்தனை. ‎
குறள்

க்வாட்ரோக்கி இடர்தீர விந்தை புரிந்த
வித்தகன் அடி, நெஞ்சே குறி. ‎
நூல்

துஷ்டர்களைக் காக்கும் பிரதமர் கனவான்
பாதகருக்கு உதவும் பஞ்சாப் சிங்கம்
பாதம் இரண்டும் சோனியாவைப் பணிய,
கீதம் பாடி, அன்னை பாட்டுக்கு
தாளம் போடும், அறநெறி மேலோன்
வேடமணிந்து, ஊழலைக் காக்க உவந்து வந்து
வர வர டர்பனார் வருக வருக!
வருக வருக வேடக்காரர் வருக வருக!
சங்கடம் தீர்க்க சடுதியில் வருக!
சரிசரி சரிசரி சரிசரி சரிசரிசரி
நீதியின் குடிகெடுத்த ஐயா வருக!



எம்மை ஆளும் சிங்கனார் கையில்
பலபல பொய்யும், பாசாங்கும்
பரந்த விழிகள் பலதை மறைக்க
விரைந்தென்னைக் காக்க மேலோன் வருக!


நன்னெறி வேடத் தலையில் டர்பனும்
இருசெவி கீழே தாடியும் மீசையும்
நிமிராத மார்பில் கோட்டும் பட்டனும்,
திருவடியதனில் பூட்ஸும் பளிச்சிட
படபட படபட படபட படபட
தடதட தடதட தடதட தடதட
என்ற பாராளுமன்றப் பேச்சுக்களேற்று
நாட்டை ஆளும் நாடகக்காரா! ‎


அடியேன் ஊழலை, டர்பன் காக்க
கண்ணாடி இரண்டும், கருப்புப் பணம் காக்க
பேசும் பொய்தனை, ப்ராண்ட் நேம் காக்க
தகவல் சட்டம் தாக்காமல் தாடியும் காக்க
ஸ்விஸ் பேங்க் கணக்கை, மீசை காக்க
பொருள் அனைத்தும், பொருளாதார மேதை காக்க
பினாமி சொத்தை, பிரதமர் காக்க

காக்க காக்க கண்மூடி சாமி காக்க
நோக்க நோக்க நோஃபைல் நோக்க
தாக்க தாக்க தாடிக்காரர் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட ‎


பில்லி சூனிய சுப்ரமணிய சாமியும்
அல்லல் படுத்தும் அடங்கா கோர்ட்டும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை சோதனையும்
கொள்ளி வாய்ப் பேய்களும் ஸி.பி.ஐ.யும்

அமைச்சர்களைத் தொடரும் ஊழல் புகார்களும்
அடியேனைக் கண்டால் அலறி நடுங்கிட

தகவல் சட்டக்காரச் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓட
வல்லபூத வலாஷ்டிகப் பேய்கள் –
விசேஷ கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும்
அடியேனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் பத்திரிகையாளரும்
டெலிவிஷன் சேனலும், பா.ஜ.க. ஆட்களும்
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

ஏமத்தில் சாமத்தில் எதிரே வந்து
என்னைத் துரத்தும் விசாரணைக் காட்டேரி
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டி, உன் பாசாங்கு பேச்சால்
கோர்ட்டுடன் சேர்ந்து கதறிக் கத்தி
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
குத்து குத்து, உன் பொய்யால் குத்து! ‎


எல்லா வழக்கும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்!

எல்லா நாட்டு பேங்குகளும் எனக்கே ஆக,
மனையும், மைன்களும், அனைத்தும் எனக்கே ஆக,
உன்னைத் துதிக்க, உன் திருநாமம்
மனமோகனே! மாசில்லா சிங்கே!
நாட்டின் பிரதமரே! பாவம் காக்கும் பவனே!

பாடினேன், ஆடினேன் பரவசமாக
ஆடினேன், நாடினேன் பிரதமர் கருணை
வாழ்க வாழ்க, வேடக்காரர் வாழ்க!
வாழ்க வாழ்க, ஊழல் கேடயம் வாழ்க!
வாழ்க வாழ்க, சோனியா அடிமை வாழ்க!
வாழ்க வாழ்க, நாற்காலி பித்தர் வாழ்க!

எத்தனை ஊழல்கள் அடியேன் செய்யினும்
அத்தனையிலும் உடனிருந்துக் காப்பது உன் கடன்!
கூட்டணி தர்மம் கண்டவன் நீ! அடியேன்
என்மீது மனமகிழ்ந்து அருள் செய்!‎
மனமோகன துஷ்டக் கவசந்தனை விரும்பிய
துக்ளக் தாண்டவராயன் அருளியதைக்
காலையில், மாலையில், கோர்ட்டில், ஜெயிலில்,
கருத்துடன், நாளும் நேசமுடன்,
நினைவதை உன்முகமாக்கி,
மனமோகன துஷ்ட கவசம்தனை
சிந்தை கலங்காது தியானிப்பவரை
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்; ‎


பொல்லா சுப்பி ரமணிசாமியும்
குடைச்சல் சிலந்தி ஸி.பி.ஐ.யும்
சொக்கு சிரங்கு குன்மம் கோர்ட்டும்
ஏறிய விஷங்கள் எளிதில் இறங்கும்!

சிதம்பர ரகசியம் அறிந்தாய் போற்றி!
பிரணாபின் ரோஷம் தணித்தாய் போற்றி!
உட்பகை கொன்று, ஊழலை மறைத்து,
நீதியின் காதில் பூவைச் சுற்றியவனே போற்றி! ‎


நாட்டுக்கு நஷ்டா போற்றி!
நேர்மைக்கு கஷ்டா போற்றி!
ஊழலோருக்கு இஷ்டா போற்றி!
சட்டத்திற்கு துஷ்டா போற்றி!

திறமிகு மழுப்பல் திலகமே போற்றி!
ஊழல் காத்து வாழ்வாய் போற்றி!
பங்கே பெற்று விளங்குவாய் போற்றி!
போற்றி போற்றி, ஊழல்பதியே போற்றி!
போற்றி போற்றி, மனமோகனனார் போற்றி!!‎

Thursday, January 5, 2012

Facts about Tirumala Tirupathi Sri Venkateswara Swamivaru

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
 


திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........
 

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின்  திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம்.அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை .

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பிகளின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால்ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள் , நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் . அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது .பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன .

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும்  பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை,முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் ,தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும் .

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500  ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம் , அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம் , தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள் .

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று  அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ .100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் . ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார்.முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார் .

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது . மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது .

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது . அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை  சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர் , நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான்மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார் .

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம் .

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் , வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார் . அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார் .

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை.ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாய த்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார் .

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.